World News

கடல் அருகே நின்று போட்டோஷுட் நடத்திய புதுமண தம்பதிகள்.. பின்பு நடந்த விபரீதம்.. வைரல் காணொளி!

கலிபோர்னியாவில் புதுமண தம்பதிகள் போட்டோஷுட் எடுக்க கடல் அலை அருகே நின்று எடுத்தபோது எதிர்பாரதவிதமாக மனைவி கடல் அலை இழுத்துச் செல்லும் காட்சி இணையத்தில் வெளியாகியுள்ளது.

அமெரிக்காவின் கலிபோர்னியா மாகாணத்தில் உள்ள லகுனா பீச், போட்டோஷூட்கள் அதிகம் நடைபெறுவது வழக்கம்.

இங்குள்ள டிரசர் ஐஸ்லாண்ட் பீச் பகுதியில், பெரும்பாலான படங்களின் சூட்டிங்குகள், வெட்டிங் போட்டோஷூட்கள் போன்றவை இப்பகுதியில் தொடர்ந்து நடைபெற்றுக்கொண்டிருக்கும்.

இந்தநிலையில், புதிதாக திருமணமான தம்பதி, ஒருபடிமேலே சென்று, தங்களது வெட்டிங் போட்டோஷூட்டை கடலில் சென்று நடத்திக்கொண்டிருந்தனர்.

அப்போது சிறிதுநேரத்தில், ராட்சத அலைகள் அவர்களை இழுத்து செல்ல அவர்கள் கத்திகூச்சலிட, பாதுகாப்புபணியில் இருந்த படையினர் துரிதமாக செயல்பட்டு அவர்களை மீட்டு கரையில் கொண்டுவந்து சேர்த்தனர்.

மீட்புபணியில் இருந்த ஒருவரின் வீடியோ பதிவில் இந்த காட்சிகள் இடம்பெற்றுள்ளன. கடலின் நடுவிற்கு சென்ற அவர்களால், ராட்சத அலைகளை எதிர்கொள்ள இயலாமல் தத்தளித்தனர்.

பின் அவர்கள் உதவுமாறு கூக்குரல் எழுப்பியதையவுடுத்து அவர்களை உயிர்காக்கும் படையினர் மீட்டுள்ளனர்.

https://www.instagram.com/tv/CCHjckoH41k/

மீட்புபணியில் இருந்த ஒருவரின் வீடியோ பதிவில் இந்த காட்சிகள் இடம்பெற்றுள்ளன. கடலின் நடுவிற்கு சென்ற அவர்களால், ராட்சத அலைகளை எதிர்கொள்ள இயலாமல் தத்தளித்தனர்.

பின் அவர்கள் உதவுமாறு கூக்குரல் எழுப்பியதையவுடுத்து அவர்களை உயிர்காக்கும் படையினர் மீட்டுள்ளனர்.

Show More

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Close