Helthy

இந்த வருடத்தில் இவ்வளவு ஆபத்துகள் ஏற்படும்… அபிக்யா ஆனந்த் வெளியிட்ட புதிய அதிர்ச்சி தகவல்..!

இந்தியாவை சேர்ந்த 14 வயது ஜோதிட சிறுவனான அபிக்யா ஆனந்த் 2019-ம் ஆண்டிலேயே கொரோனா வைரஸ் பற்றி கணித்திருந்தார்.

இந்த சின்னஞ்சிறு சிறுவன் கடந்த வருடம் ஆகஸ்டில் வெளியிட்ட தலைப்பில் 2019 முதல் 2020 வரை உலகத்தில் நடைபெற இருக்கும் பேரழிவுகளை பற்றி கூறி இருந்தான்.

அதில் 2019 நவம்பர் முதல் 2020 ஏப்ரல் வரை உலகம் கொடிய நோயினால் பாதிக்கப்படும் என்றும், இதனால் உலகம் முழுவதில் இருந்தும் பொருளாதார பின்னடைவை சந்திக்க நேரலாம் என்றும் கூறி இருந்தான்.

அவன் வெளியிட்ட போது பெரிதாக பேசபடாத அந்த பதிவு உண்மையில் கொடிய நோயினால் உலகம் பாதிக்கபட்ட போது மிகப் பெரிய அளவில் வைரலாகியது.

அபிக்யா
http://whatstubes.com/

இவ்வகையில் இந்த சிறுவன் வெளியிட்ட புதிய பதிவில் திடுக்கிடும் தகவல்கள் சிலவற்றை கூறி உலக மக்களை மேலும் அதிர்ச்சி அடைய வைத்துள்ளான்.

2020-ல் வரும் டிசம்பரில் பல பேரழிவை மீண்டும் உலகம் எதிர்கொள்ள நேரலாம் என்று கூறியுள்ளான். மேலும் அப்படி அவன் என்ன தான் கூறினான் என்று இப்பதிவில் தெரிந்து கொள்வோம் வாருங்கள்.

அபிக்யா ஆனந்த் கூறியுள்ள கருத்துபடி பார்த்தால் உலகம் தற்போது எதிர்கொண்டு வரும் இக்கொடிய வைரஸில் இருந்து அடுத்த மாத இறுதியில் அதாவது ஜூன் 30 இல் படிப்படியாக குறைய துவங்கும் என்று எதிர்பார்க்கலாம்.

சிறுவன் கூறியுள்ள பதிவில், தான் கூறும் கருத்துக்கள் வலைத்தளங்களில் தொடர்ந்து தவறாக பதியப்படுகிறது. இந்த நோய் முற்றிலும் நீங்கி விடும் என்று நான் கூறவில்லை என்றும் கூறியுள்ளான்.

ஜூன் மாதத்திற்கு பிறகு படிப்படியாக குறைந்து ஜூலை மாதத்தில் மீண்டும் வலுப்பெற்று தானாகவே குறைந்துவிடும் என்று கணித்துள்ளான். இதனை நாம் பொறுத்திருந்து தான் பார்க்க வேண்டும்.

இதனால் மக்கள் அனைவரும் விவசாயத்திற்கு முக்கியத்துவம் கொடுக்க வேண்டும் என்றும், விவசாயிகள் அதிக அளவில் பயிர் செய்ய வேண்டும் என்றும் கூறியுள்ளான்.

தற்போது, நாடெங்கிலும் பயிர்களை நாசம் செய்து கொண்டிருக்கும் வெட்டுக்கிளி கூட்டத்தை அகோரப் பசியுடன் காணும் பொழுது உணவு பஞ்சம் ஏற்படுவதற்கான சாத்தியக்கூறுகள் உண்டு.

இந்த வெட்டுக்கிளிகள் பருவநிலை மாற்றம் அடைவதில் தோற்றத்திலும், தன்மையிலும் வித்தியாசமாக உருவானவை என்பதையும், 2500 பேர் எடுத்துக்கொள்ளும் உணவை ஒரே நாளில் தின்று தீர்த்து விடுவதாகவும் ஊடகங்கள் வாயிலாக நாம் அறிய முடிகிறது.

சர்வதேச ரீதியாக மக்கள் நோயுடனும், உணவு பஞ்சத்துடனும் போராட வேண்டிய நிலைக்கு காரணமாக அச்சிறுவன் கூறுவது, விலங்குகள் கொல்லப்படுவதை தான். அசைவ உணவை தவிர்ப்பதும், விலங்குகள் கொல்லப்படாமல் பாதுகாக்கப்படுவதை உறுதி செய்வதும் மக்களுக்கு நல்லது என்று கூறுகிறான்.

நோயிலிருந்து நம்மை காத்துக்கொள்ள நம் உடலில் நோய் எதிர்ப்பு சக்தியை அதிகரிப்பதை தவிர வேறு ஒன்றும் வழியில்லை. நாம் அன்றாடம் சமைக்கும் உணவில், மஞ்சள், வேம்பு, அமிர்தவல்லி இந்த மூன்று மூலிகை உணவுகளையும் சேர்த்துக் கொள்வதன் மூலம் நோயெதிர்ப்பு சக்தியை அதிகரித்துக் கொள்ள முடியும் என்று கூறுகிறான்.

இந்த ஒரு வேளையில், இதை விட ஒரு பேரழிவு காத்திருக்கிறது என அவர் தெரிவித்துள்ளது மக்களிடையே பெரும் பெரும் பதற்றத்தை ஏற்படுத்தி உள்ளது.

தினமும் தமிழில் செய்திகளை படிக்க தினமிளிர் உடன் இணைந்திருங்கள்

Show More

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Close