Helthy

கொரோனா குறித்து கர்ப்பிணி பெண்கள் பயம் கொள்ள வேண்டியது அவசியம் தானா?

கர்ப்ப காலம் என்பது ஒவ்வொரு பெண்ணிற்கும் கூடுதல் பொறுப்பை அளிக்கக்கூடிய ஒரு விஷயம். இதுவரை தன்னை மட்டுமே பார்த்து வந்து ஒருவருக்கு, தனது குழந்தை என வரும் போது கூடுதல் கவனம் மற்றும் அக்கறை ஏற்படுவது இயல்பு. அதுவும். தன் வயிற்றிற்குள் வளர்ந்து வரும் சிசுவை பார்த்துக் கொள்வது என்பது அனைத்தை காட்டிலும் மிகவும் முக்கியமான ஒரு பொறுப்பு என்று தான் கூற வேண்டும்.

கர்ப்ப
http://whatstubes.com/

ஒரு உடல், இரு உடலாக மாறும் போது உடலின் அனைத்து சத்துக்களும் குறைய தான் செய்யும். நோய்எதிர்ப்பு சக்தியும் குறையும் என்பதால் மிகுந்த கவனத்துடன் இருக்க வேண்டியது அவசியம். இதனால் தான், கர்ப்பிணி பெண்கள் சுலபமாக நோய்தொற்றுகளுக்கு ஆளாகி நோய்வாய்ப்பட கூடும் என்கின்றனர் மருத்துவர்கள். உலகமே கொரோனா எனும் புதிய வைரஸ் தொற்றின் பீதியில் நடுங்கி வரும் இத்தகைய சூழலில், ஒரு கர்ப்பிணி பெண் பயம் கொள்வது என்பது இயற்கை தான்.

சில நாடுகள் கர்ப்பிணி பெண்களுக்கு நோய் தொற்றின் தாக்கம் இருக்க கூடாது என்பதற்கான பயண கட்டுப்பாடுகளை விதித்துள்ளது. அதுவும், வைரஸ் பாதிப்பு உள்ள நாடுகளுக்கு பெண்கள் செல்ல தடையும் விதிக்கப்பட்டுள்ளது. இருந்தாலும், உங்களை பற்றியும், உங்களை வயிற்றில் வளரும் சிசுவை பற்றியும் கவலையாக உள்ளா? கொரோனா வைரஸ் உங்கள் குழந்தையை பாதித்திடுமோ என்ற பயம் உள்ளதா? அப்படியெனில் இதை படியுங்கள். உங்கள் பயம் குறைந்துவிடும்.

என்ன தான் நடக்கிறது? கொரோனா வைரஸ் தாக்குதலுக்கு ஆளானவர்களின் எண்ணிக்கை அதிகரித்துக் கொண்டே வருகிறது. ஆனால், அதுவே கர்ப்ப காலத்தில் இதுபோன்ற பிரச்சனை என்பது சிக்கலான ஒன்று தான். தொடர்ந்து செய்திகளை பின்பற்றி வருபவராக இருந்தால், பரவி வரும் கொரோனா வைரஸ் என்பது புதிய COVID-19 வைரஸ் என்பது தெரிந்திருக்கும்.

இது தான் இப்போது மக்களை தாக்கி வருகிறது. இந்த வைரஸ் தாக்குதலின் அறிகுறிகள் அனைத்து சாதாரண சளி தொல்லை போன்று தான் ஆரம்பிக்கும். ஆனால், எந்த நேரத்தில் வேண்டுமானாலும் இது கொடியதாக மாறக்கூடும். நிபுணர்கள் கூற்றின் படி, கொரோனா குடும்பத்தில் இருந்து வெடிக்க தொடங்கியுள்ள இந்த வைரஸ், சாதாரண நிமோனியா அறிகுறிகளில் தோன்றி, தனிமைப்படுத்தப்பட்ட, சிகிச்சை அளிக்க வேண்டிய ஒரு பாதிப்பாக இருக்கிறதாம். ஆதாரம் இல்லை விஞ்ஞானிகளைப் பொறுத்தவரை, இந்த வைரஸ் எப்படி பரவுகிறது என்பது குறித்து தொடர்ந்து சோதனையில் ஈடுபட்டு வருகின்றனர்.

இருப்பினும், இந்த வைரஸ் கர்ப்பிணிகளுக்கோ, அவர்கள் வயிற்றில் இருக்கும் குழந்தைக்கோ பாதிப்பை ஏற்படுத்தக்கூடியது என்பதற்கான எந்த ஒரு ஆதாரமும் இதுவரை கிடைக்கவில்லை. சிசுவை பாதிக்காது ஒருவேளை கர்ப்பிணிகள் இந்த வைரஸால் பாதிக்கப்பட்டால், அது குழந்தைக்கு பரவுவதற்கான வாய்ப்பு மிக மிக குறைவு என்றே விஞ்ஞானிகள் தெரிவிக்கின்றனர். அதுமட்டுமல்லாது, இந்த வைரஸ் தொற்று ஏற்பட்டால் கூட, அது வயிற்றில் இருக்கும் குழந்தைக்கோ அல்லது பிறப்பு தொடர்பாகவோ எந்தவொரு சிக்கலையும் இதுவரை ஏற்படுத்தவில்லை.

எனவே, இந்த வைரஸ் பயத்தால் தூக்கத்தை கெடுத்துக் கொண்டு கவலைப்படும் அளவிற்கு எந்த ஒரு பிரச்சனையும் இல்லை. இருப்பினும். ஆபத்து காரணிகள் குறித்து தெரிந்து கொண்டு, முறையாக முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை கையாளுவதன் மூலம் வைரஸ் தாக்குதலில் இருந்து நிச்சயம் உங்களை பாதுகாத்து கொள்ளலாம்.

என்ன செய்ய வேண்டும்?

  • கொரோனா வைரஸ் தொற்றின் அறிகுறி, ஆரம்பத்தில் சாதாரண சளி தொல்லை போலவே தோன்றும் என்பதால், எப்போதும் சற்று அதிக கவனத்துடன் முன்னெச்சரிக்கையுடன் இருப்பதே சிறந்தது.
  • கர்ப்ப காலத்தில் உடலில் ஏற்படக்கூடிய மாற்றங்கள் அனைவருக்கும் சாதாரணமாக அமைந்து விடாது. சிலருக்கு அது கடினமான ஒன்றாக கூட இருக்கும். அது போன்ற சமயங்களில் நோயெதிர்ப்பு சக்தி குறைவதால், எளிதில் நோய் தொற்றுகள் ஏற்படக்கூடும். எனவே, தினசரி நடவடிக்கைகளை முறையாக பின்பற்றி வருவதன் மூலம் ஆபத்துகள் குறைந்து, ஆரோக்கியமான கர்ப்ப காலத்தை பெற்றிடலாம்.
  • கர்ப்பிணி பெண்களுக்கான சிறந்த முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் என்பது வித்தியாசமாக எதுவும் இல்லை. சாதாரண ஒரு மனிதரை போல தான் கர்ப்பிணி பெண்களும் முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை முறையாக பின்பற்ற வேண்டியது அவசியம். ஒருவேளை, அதிகப்படியான காய்ச்சல், சளி அல்லது இருமல் போன்ற அறிகுறிகள் தோன்றினால் கீழே கொடுக்கப்பட்டுள்ளதைப் பின்பற்றுங்கள்:

அறிகுறிகள் தென்பட்டால் பின்பற்ற வேண்டியவைகள்: –

கை கழுவுவது மிகவும் அவசியமான ஒன்று. உலக சுகாதார மையம் புதிதாக வெளியிட்டுள்ள அறிக்கையின் படி, முகத்திற்கு மாஸ்க் அணிவதை விட சுகாதாரத்துடனும், முறையாக கை கழுவும் பழக்கம் இருந்தாலே நோய் தொற்று ஏற்படாமலும், பிறருக்கு பரவாமலும் காத்திடலாம் என்று தெரிகிறது.

உடல் நலக்குறைவு ஏற்படுவதை உணர்ந்தாலோ அல்லது அறிகுறிகள் ஏதேனும் தென்பட்டாலோ வீட்டை விட்டு வெளியே எங்கும் செல்ல வேண்டாம். நல்ல ஓய்வு ஒன்றே அதுபோன்ற தருணங்களில் தேவையான ஒன்று.

அதிகப்படியான திரவ பதார்த்தங்களை உட்கொண்டு, உங்களது உடலை நீரேற்றத்துடன் வைத்திருக்கவும். கர்ப்ப கால உணவுகள், பானங்கள் எதையும் தவிர்த்திட வேண்டாம். – மருத்துவரின் அறிவுரையின்றி எந்தவொரு மருந்தையும் எடுத்துக் கொள்ளவே கூடாது. கர்ப்ப காலங்களில் சில மருந்துகள் உடலுக்கு தீங்கு விளைவிக்கக்கூடும் என்பதால் மருத்துவரை அணுகி மருந்தை எடுத்துக் கொள்ளுங்கள்.

அறிகுறிகள் தொடரும் பட்சத்தில் உங்களது மருத்துவரை ஒருமுறை சந்திப்பது மிகவும் சிறந்தது. – இத்தகைய புதிய கொரோனா வைரஸ் தாக்குதலானது, கடந்த 14 நாட்களில் வுஹான் சென்று வந்து, காய்ச்சலுக்கான அறிகுறி தொடரந்து அதிகரித்து வருபவர்களுக்கு தான் அதிகம் உள்ளது. மற்றபடி, இந்த வைரஸ் பரவுவதற்கு வாய்ப்பு மிகவும் குறைவு.

தினமும் தமிழில் செய்திகளை படிக்க தினமிளிர் உடன் இணைந்திருங்கள்

Show More

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Close