Srilanka News

பிரதேச செயலகங்களில் அறிமுகப்படுத்தப்பட்டுள்ள புதிய நடைமுறை!!

பிரதேச செயலகங்களுக்கு சமூகமளிக்கும் பொது மக்கள் மற்றும் அரச உத்தியோகத்தர்களின் உடல் வெப்ப நிலையை அளவிடுவதற்கு விசேட ஏற்பாடுகள் மேற்கொள்ளப்பட்டுள்ளது.

மட்டக்களப்பு மாவட்ட அரசாங்க அதிபர் திருமதி.கலாமதி பத்மராஜாவின் வழிகாட்டலில் அரசாங்கத்தின் அறிவுறுத்தல்களுக்கமைவாக ஓட்டமாவடி பிரதேச செயலகத்தில் உடல் வெப்ப நிலை அளவிடும் செயற்பாடுகள் இடம்பெறுகின்றது.

இதேவேளை, உத்தியோகத்தர்கள் மற்றும் பொதுமக்கள் கைகளை நன்றாக கழுவி முகக்கவசம் அணிந்து வருகை தருவதற்கு ஏற்ற ஒழுங்குகள் மேற்கொள்ளப்பட்டுள்ளது.

உடல் வெப்பநிலை பரிசோதிக்கப்படும் போது அவர்களின் உடல் வெப்பநிலை அதிகரித்துக் காணப்படுகின்றவர்கள் கொரோனா தொற்று அறிகுறிகளில் ஒன்றான காய்ச்சல் காணப்படலாமென்ற அடிப்படையில் அலுவலகத்திற்குள் அனுமதிக்காமலிருக்க நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.

கொரோனா தொற்று பரவாமலிருக்க சுகாதாரப் பிரிவினரால் வழங்கப்படும் அறிவுறுத்தல்கள் மற்றும் அரசினால் வழங்கப்படும் அறிவறுத்தல்களையும் முழுமையாகக் கடைப்பிடிக்கும் வகையில் செயலகங்கள் செயற்பட்டு வருகின்றமை குறிப்பிடத்தக்கது.

Show More

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Close