World News

வடகொரிய தலைவர் கிம் ஜாங் தமது வாழ்க்கையில் பின்பற்றும் அமெரிக்க ஜனாதிபதி யார் தெரியுமா? வெளிவராத தகவல்

பரபரப்புக்கு பெயர்போன வடகொரிய தலைவர் கிம் ஜாங் வுன் தமது வாழ்க்கையில் அமெரிக்க முன்னாள் ஜனாதிபதி ஜான் எஃப் கென்னடியை பின்பற்றி வருவதாக புதிதாக வெளியாகவிருக்கும் புத்தகம் ஒன்றில் குறிப்பிடப்பட்டுள்ளது.

அமெரிக்க ஜனாதிபதி கென்னடி, இரண்டாம் உலகப் போருக்குப் பிந்தைய அமெரிக்காவில் நம்பிக்கையின் ஒரு கலங்கரை விளக்கமாக திகழ்ந்தார்.

ஆனால் வடகொரிய தலைவர் கிம் ஜாங் வுன் அவ்வாறான ஒரு குணாதிசயத்திற்கு சொந்தக்காரரல்ல. இருப்பினும் கென்னடியின் இளமைகால வாழ்க்கையை நகலெடுத்து தமது சொந்த பதிப்பில் கிம் ஜாங் வாழ்ந்து வருகிறார்.

தம்மை வடகொரியாவின் கென்னடியாக கருதி வலம் வரும் கிம் ஜாங், தமது மனைவி Ri Sol Ju-வை ஜாக்கி கென்னடி என்றே உருமாற்றியுள்ளார்.

கிம் ஜாங் தமது மனைவியை ஒரு நடமாடும் விளம்பரமாகவே உருமாற்றி வைத்துள்ளார் என அந்த புத்தகத்தில் குறிப்பிடப்பட்டுள்ளது.

Becoming Kim Jong-un என்ற இந்த புத்தகம் அடுத்த வாரம் அமெரிக்காவில் வெளியாக உள்ளது.

தனது ஆட்சியின் கீழ் டசின் கணக்கான இரத்தக்களரி சுத்திகரிப்புகளை மேற்கொண்ட கிம், வட கொரிய அதிகார வர்க்கத்தில் தமது பதவியை தக்கவைத்துக் கொள்வது பற்றிய நுணுக்கங்களை மட்டுமே அறிந்து வைத்திருக்கிறார்.

அந்தவகையில், தமது உயிருக்கு ஏதேனும் சிக்கல் ஏற்பட்டால், கண்டிப்பாக வடகொரியாவின் அடுத்த தலைவராக தமது மனைவியையே அவர் முன்னிலைப்படுத்துவார் என்கிறது அந்த புத்தகம்.

கிம் மற்றும் கென்னடியின் ஆளுமையை ஒப்பிடவே முடியாது என்றாலும், கென்னடி ஜனநாயக அரசியலை சார்ந்தவர். ஆனால் கிம்மின் தாத்தா ஒரு தேசியவாத கெரில்லா போராளி. சோவியத் ரஷ்யாவின் ஆதரவுடன் வடகொரியாவை நிறுவியவர்.

வடகொரியாவின் ஏழ்மையை ஒருபோதும் கண்டுகொள்ளாத கிம் ஜாங், சீன சுற்றுலா பயணிகளை ஈர்க்க, வடகொரியாவை மாபெரும் சுற்றுலா தலமாக கட்டமைத்து வருகிறார்.

மேற்கத்திய உடைகளுக்கு கிம்மின் தாத்தா காலத்தில் இருந்தே வடகொரியாவில் தடை இருந்தாலும், கிம் மனைவி Ri உலகின் உயர் ரக உடைகளிலேயே வலம் வருவார்.

மட்டுமின்றி தம்மை வடகொரியாவின் கேட் மிடில்டன் என்றே அவர் கருதுவதாக குறித்த புத்தகத்தில் கூறப்பட்டுள்ளது.

கிம் ஜாங் வடகொரியாவின் தலைவராக 2011-ல் பொறுப்பேற்ற பின்னர் சுமார் 7 மாதங்களுக்கு பின்னர் Ri கிம்முடன் வலம் வர தொடங்கினார்.

வடகொரியாவின் உத்தியோகப்பூர்வ படற்குழுவில் நடன மங்கையாக இருந்த Ri, பின்னர் கிம்மின் காதலியாகவும், தொடர்ந்து மனைவியாகவும் மாறினார்.

2018 முதல் Ri தமது கணவருடன், அரசாங்க அலுவல்களிலும் தலையிட துவங்கினார். அதே ஆண்டு கணவர் கிம்முடன் சீனாவுக்கு சென்று தனது உடை மற்றும் அலங்காரங்களால் சீன மக்களை கவர்ந்தார்.

மட்டுமின்றி அமெரிக்க ஜனாதிபதி டிரம்புடனான இரு சந்திப்புக்கு பின்னாலும் Ri செயல்பட்டதாக கூறப்படுகிறது.

வடகொரியாவின் கொடூர நடவடிக்கைகளை உலக நாடுகளில் இருந்து மறைக்க, ஒரு முகமூடியாக Ri பயன்படுத்தப்படுவதாக குறித்த புத்தகத்தில் கூறப்பட்டுள்ளது.

Show More

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Close