Corona News
கொரோனா வார்டு ஒன்றில் சுற்றித்திரிந்த 5 பூனைகள் அடுத்தடுத்து பலி!!

கேரளாவில் கொரோனா வார்டு ஒன்றில் இருந்த 5 பூனைகள் அடுத்தடுத்து பலியான சம்பவம் பாரிய அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
கேரளா முழுக்க கொரோனா கட்டுப்படுத்தப்பட்டாலும் காசர்கோட்டில் கொரோனாவை கட்டுப்படுத்துவது கடினம் என்று கூறுகிறார்கள். இந்த நிலையில்தான் காசர்கோட்டில் கொரோனா வார்டில் பூனைகள் பலியான சம்பவம் அதிர்ச்சி அளித்துள்ளது.
அங்கு இருக்கும் அரசு மருத்துவமனை ஒன்றில் கொரோனா வார்டில் இந்த சம்பவம் நடந்துள்ளது.
அங்கு முதல் பூனை கடந்த மார்ச் 28ம் தேதி பலியானது. அதன்பின் வரிசையாக 4 பூனைகள் பலியானது. மொத்தமாக அடுத்தடுத்த நாட்களில் இரண்டு ஆண் பூனை, இரண்டு குட்டி பூனை, ஒரு பெண் பூனை பலியாகி உள்ளது. இந்த பூனைகள் கொரோனா வார்டில் சுற்றி திரிந்துள்ளது.
இதுவரை இந்த பூனைகளுக்கு கொரோனா வைரஸ் இருப்பது கண்டுபிடிக்கப்படவில்லை. முதற்கட்ட சோதனையில் கொரோனா அறிகுறிகள் எதுவும் இல்லை என்று கூறுகிறார்கள். இதனால் இரண்டாம் கட்ட சோதனைக்காக தற்போது திருவனந்தபுரம் அனுப்பி உள்ளனர். இந்த சோதனையின் முடிவில் உண்மை தெரிய வரும். முடிவு வரும் வரை காத்திருக்க வேண்டும் என்றும் கூறப்படுகின்றது.
இதேவேளை, ஏற்கனவே அமெரிக்காவில் புலி ஒன்றுக்கு கொரோனா வைரஸ் உறுதி செய்யப்பட்டது. சில நாடுகளில் நாய்களுக்கு கொரோனா வைரஸ் அவர்களில் முதலாளிகள் மூலம் பரவியது. விலங்குகளிடம் இருந்து மனிதர்களுக்கு கொரோனா பரவும் என்று இதுவரை உறுதி செய்யப்படவில்லை. மனிதர்களிடம் தனி மனித விலகலை கடைபிடிப்பது போல, சில நாட்களுக்கு விலங்குகளிடமும் கொஞ்சம் கவனமாக இருக்க வேண்டும் என்று கோரப்படுகின்றது.