Cinema NewsIndia News

எவ்வளவு பணம் கொடுத்தாலும் அதில் மட்டும் நடிக்கமாட்டேன்.. நடிகை ப்ரியா ஆனந்தின் அதிரடி விளக்கம்!

நடிகை பிரியா ஆனந்த தமிழில் சிவகார்த்திகேயன் நடிப்பில் வெளியான எதிர்நீச்சல் திரைப்படத்தின் மூலம் பெரும் வரவேற்பை பெற்றார்.

அதைத்தொடர்ந்து, கடைசியாக விக்ரம் மகன் துருவ் நடித்த ஆதித்ய வர்மா படத்தில் நடித்திருந்தார்.

இந்நிலையில், தான் அவர் எவ்வளவு பணம் கொடுத்தாலும் முகத்தை வெள்ளையாக்கும் அழகு சாதன க்ரீம் விளம்பரங்களில் மட்டும் நடிக்கவே மாட்டேன்.

வெள்ளையாக இருப்பது தான் அழகு என்று சொல்வது மிகவும் தவறான விஷயம். தென்னிந்தியர்களிடம் இருக்கும் டஸ்கி கலர் , கண்ணில் இருக்கும் பிரகாசம் வேறு எங்கும் கிடையாது.

தென்னிந்திய பெண்கள் டஸ்கி கலரில் இருந்தாலும் முகத்தில் இருக்கும் கலையும், கண்ணில் இருக்கும் ஸ்பார்க்கும் எங்குமே இருக்காது என்று பேசியுள்ளார்.

இதற்காக, ஏற்கனவே வெள்ளையாக இருக்கும் மும்பை பெண்களை இங்கே கூட்டி வந்து அவர்களுடைய கலரை குறைக்க மேக்கப் போட்டு பிறகு இந்த க்ரீம் போட்டால் தான் வெள்ளையாவார்கள் என்று கூறுவதெல்லாம் கிறுக்குத்தனம் என்று விளாசியுள்ளார்.

Show More

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Close